Vinesh Phogat | BJP MP Karan File Pic (Photo Credit: @BiIndia/status | @ANI X)

ஆகஸ்ட் 07, டெல்லி (Delhi News): பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் (Paris Olympics 2024) போட்டிகள் கடந்த ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஆகஸ்ட் 06) நடந்த மல்யுத்த போட்டியில், பெண்களுக்கான பிரீஸ்டைல், 50 கிலோ பிரிவில் அரையிறுதியில் இந்தியா சார்பில் வினேஷ் போகத் (Vinesh Phogat) விளையாடினார். இப்போட்டியில், கியூபாவின் லோபசை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார். PM Modi Tweets for Vinesh Phogat: ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்.. பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்..!

தகுதி நீக்கம்:

இந்நிலையில், பைனலுக்கு முன்னதாக வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. 50 கிலோ பிரிவில் விளையாடும் வினேஷ் போகத், 100 கிராம் அளவு எடை கூடியதால், ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பைனலுக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் அளிக்கப்படுகிறது. இதில் வெள்ளிப்பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்ற நிலையில், வெள்ளி அல்லது தங்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, இந்தியாவின் பதக்க கனவு பறிபோனதால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பாஜக எம்பி கருத்து:

இதுகுறித்து பாஜக எம்பி கரண் பூஷண் சிங் (BJP MP Karan Bhushan Singh) கூறுகையில், "இது இந்திய நாட்டுக்கே பெரும் இழப்பாகும். இதனை இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு கவனத்தில் எடுத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்" என தெரிவித்துள்ளார். இவர், முன்னாள் எம்பி-யான பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கின் மகன் ஆவார். தற்போது, கைசர்கஞ்ச் மக்களவையின் எம்பி-யாக உள்ளார். மேலும், உத்தர பிரதேசத்தின் மல்யுத்த சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.