ஜூன் 24, ஜான்சி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், சோனகிரியில் உள்ள பர்கே கிராமத்தை சேர்ந்தவர் காஜல் அஹிர்வார். காஜலுக்கு நேற்றைய தினம் (ஜூன் 23) சிப்ரி பஜாரில் உள்ள கோடானில் திருமணம் நடைபெறவிருந்தது. இதனால் திருமணத்திற்கு முன் மாலை 5 மணியளவில் காஜல் தனது உறவினருடன் அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இதன் அருகில் வசிக்கும் மணப்பெண்ணின் (Bride) முன்னாள் காதலன் தீபக் அஹிர்வார் என்பவர் அழகு நிலையத்திற்கு வந்துள்ளார். காஜலை பியூட்டி பார்லரை விட்டு வெளியே வரச் சொன்னார். ஆனால், அதற்கு அவர் மறுத்துவிட்டார். Lawyer Killed In Car Collision: காரை தடுக்க முயன்ற வழக்கறிஞர் உடல் நசுங்கி பலி; வீடியோ வைரல்.. ஓட்டுநர் கைது..!
இதைத்தொடர்ந்து, அவர் கதவின் கண்ணாடியை உடைத்து அழகு நிலையத்திற்குள் நுழைந்தார். அப்போது, தான் வைத்திருந்த துப்பாக்கியால் காஜலை சுட்டுள்ளார். காஜல் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
थाना सीपरी बाजार क्षेत्रान्तर्गत युवक द्वारा युवती को गोली मार देने तथा दौराने उपचार युवती की मृत्यु हो जाने तथा पुलिस द्वारा की जा रही कार्यवाही आदि के संबंध में वरिष्ठ पुलिस अधीक्षक जनपद झाँसी की वीडियो बाइट- pic.twitter.com/upqr8GKsFm
— Jhansi Police (@jhansipolice) June 23, 2024