Headmaster Attacks BSA (Photo Credit: @TrueStoryUP X)

செப்டம்பர் 24, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், சீதாபூரில் (Sitapur) பெண் ஆசிரியர் ஒருவர், பள்ளியின் தலைமை ஆசிரியர் பிஜேந்திர வர்மா மீது புகார் அளித்தார். இதுதொடர்பாக, மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரி (BSA) அலுவலகத்தில் விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டார். விசாரணையின் போது, மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரி அகிலேஷ் சிங்கிற்கும், குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. Kalaimamani Awards: 2021, 2022, 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு.. லிங்குசாமி முதல் அனிரூத் வரை.. முழு விபரம் இதோ.!

தலைமை ஆசிரியர் கைது:

இதில், ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் தனது பெல்ட்டை உருவி, மாவட்ட அடிப்படைக் கல்வி அதிகாரியை சரமாரியாக தாக்கினார். உடனே, அலுவலக ஊழியர்கள் அவரை தடுத்தி நிறுத்தினர். இச்சம்பவம் முழுவதும், அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதன்பின்னர், தலைமை ஆசிரியருக்கு எதிராக ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. புகாரின்பேரில், குற்றம் சாட்டப்பட்டவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: