Professor Married Student (Photo Credit: @gite_ai X)

பிப்ரவரி 05, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்க மாநிலத்தில் அரசு நடத்தும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (MAKAUT) பயன்பாட்டு உளவியல் துறையில் பணிபுரிந்து வரும் மூத்த பேராசியரை ஒருவர், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் ஒருவரை பெங்காலி-இந்து முறைப்படி வகுப்பறையிலேயே திருமணம் செய்துகொள்ளும் வீடியோவானது இணையத்தில் வைரலானது. Teacher Suspended: கல்வி சுற்றுலாவில் பேருந்து ஓட்டிய வீடியோ வைரல்.. பள்ளி ஆசிரியர் 'சஸ்பெண்ட்'..!

மாணவரை மணந்த பேராசிரியை:

இந்நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கல்லூரியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமூக வலைதளங்கள் முழுவதும் வீடியோ பரவ ஆரம்பித்த உடனேயே நாங்கள் ஆசிரியருக்கு கட்டாய விடுப்பு வழங்கிவிட்டோம். மாணவர்களுக்கு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகவே அந்த திருமண நிகழ்வு நடந்ததாக ஆசிரியர் விளக்கம் கொடுத்துள்ளார். அவரை புடிக்காத யாரோ ஒருவர் வேண்டும் என்றே சமூகவலைத்தளத்தில் பரவ விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியை ராஜினாமா:

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் சார்பாகவும் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம் சம்மந்தப்பட்ட பேராசிரியர், வீடியோவால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதால் பதவியை ராஜினாமா செய்வதாகவும், கடந்த சில வருடங்களாக இங்கு பணி செய்ய வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி எனவும் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ இதோ: