பிப்ரவரி 05, சாம்ராஜ் நகர் (Karnataka News): கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் (Chamarajanagar) மாவட்டம், எலந்துாரின் கும்பள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆங்கில புத்தாண்டை ஒட்டி கல்விச் சுற்றுலாவுக்கு (Tour) அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுடன் ஆசிரியர் வீரபத்ரேசாமி உள்ளிட்ட சிலர் ஆசிரியர்கள் சென்றனர். ஹாசனின் பேலுார், ஹளேபீடு ஆகிய பகுதிகளுக்கு பேருந்தில் மாணவர்கள் பயணம் செய்தனர். Child Death: காது குத்துவதற்காக மயக்க ஊசி.. வாயில் நுரை தள்ளி 6 மாத குழந்தை பரிதாப மரணம்..!
ஆசிரியர் சஸ்பெண்ட்:
இந்நிலையில், மாணவர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக, சிறிது துாரம் வரை பேருந்தை ஆசிரியர் வீரபத்ரேசாமி ஓட்டிச் சென்றுள்ளார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக, பொதுக்கல்வி துணை இயக்குநர் ராமசந்திர ராஜே அர்சிடம், எலந்துார் மண்டல கல்வி அதிகாரி அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையின் அடிப்படையில், ஆசிரியர் வீரபத்ரசாமியை பணியிடை நீக்கம் (Teacher Suspended) செய்த பொதுக்கல்வி துணை இயக்குநர், துறைரீதியிலான விசாரணை நடத்த உத்தரவிட்டார். இச்சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.