மார்ச் 11, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் சகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஒரு தம்பதியின் மகள் விஜயலட்சுமி. இவர், கல்லூரியில் படித்து வருகிறார். மாணவியை விஷ்ணு என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்துள்ளார். மேலும், அவர் படிக்கும் கல்லூரி மற்றும் விடுதிக்கு சென்றும் விஷ்ணு வற்புறுத்தி தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய்துள்ளார். ஆனால், மாணவி விஷ்ணுவின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனை பற்றி தனது தந்தையிடமும் தெரிவித்தார். மாணவியின் தந்தை விஷ்ணுவை கண்டித்துள்ளார். இது விஷ்ணுவை மேலும் ஆத்திரமடைய செய்தது. 20 Days in Mariupol Get Oscars: ரஷ்யா – உக்ரைன் போரால் நொறுங்கிப்போன இயக்குனர்; ஆஸ்கர் விருது பெற்ற கையுடன் கண்ணீர் கோரிக்கை.!
தப்பிவிட்டு ஓட்டம்: இதனையடுத்து, நேற்று காலையில் வீட்டின் அருகே நடந்து சென்ற விஜலட்சுமியை, விஷ்ணு மற்றும் அவருடைய 2 நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி விஷ்ணு மற்றும் அவரது நண்பர்களுக்கு தெரியவந்ததை அடுத்து, காவல்துறையினரிடம் சிக்கி கொள்வோம் என பயந்து ஹாவேரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் இருந்து மாணவியை இறக்கிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனையடுத்து, தகவல் அறிந்து சென்ற காவல்துறையினர் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவியை விஷ்ணு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி உள்ள விஷ்ணு மற்றும் அவரது 2 நண்பர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.