Mstyslav Chernov (Photo Credit: @OstapYarysh X)

மார்ச் 11, கலிபோர்னியா (Cinema News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில், ஹாலிவுட் திரையரங்கில் 96வது (Oscar Awards) ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், சிறந்த ஆவணப்படமாக '20 டேஸ் இன் மரியுபோல்' (20 Days in Mariupol) தேர்வு செய்யப்பட்டது. இப்படத்தின் இயக்குனர் மிஸ்டைஸ்லாவ் சேர்னோவ் (Mstyslav Chernov) விருதினைப் பெற்றார்.

கண்ணீர் கோரிக்கை: அப்போது அவர் பேசியதாவது, "உக்ரைன் - ரஷியா போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட உக்ரைன் நகரங்களில் ஒன்றான மரியுபோலில் (Mariupol) நடந்த இழப்புகள் ஏராளம். உக்ரைனை காப்பாற்ற வேண்டும், அங்கு ரஷியாவால் பிணையக்கைதியாக பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்பட வேண்டும். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்து இருக்கின்றனர். உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தப்பட்டு, மனிதம் நிலைநாட்டப்பட வேண்டும். இதுவரை நடந்தவற்றை மாற்ற இயலாது, ஆனால் இனி அதனை தவிர்த்து வரலாறு படைக்கலாம். வரலாறினை மாற்ற முடியாது எனினும், அவற்றை உருவாக்க முயற்சிக்கலாம்" என கனத்த இதயத்துடன் பேசி சென்றுள்ளார். விழாவில் பங்கேற்ற அனைவரும் அவரின் கருத்தை ஏற்றுக்கொண்டு, எழுந்து நின்று தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினர். Oscar Awards 2024: இந்திய கலை இயக்குனரை நினைவுகூர்ந்த ஹாலிவுட் திரையுலகம்; ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி.!

ரஷ்யா - உக்ரைன் போர்: உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யா அதிரடி தாக்குதலை தொடர்ந்தது. ஆனால், ரஷ்யாவே எதிர்பார்க்காத அளவுக்கு உக்ரைன் போரில் கடும் சவால் கொடுத்தது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து வருவதால் ரஷ்யாவுக்கு சரிசமமாக உக்ரைன் போராடி வருகிறது. இதனால் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னும் நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யாவின் இறையாண்மையை காக்க அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என ஒருபக்கம் ரஷ்யா மிரட்டி வருகிறது. இந்த கொடூர போரினை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் '20 டேஸ் இன் மரியுபோல்'.