
ஜூலை 04, ஃபரூக்காபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் (Farrukhabad) மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்ச் பகுதியில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நேற்று முன்தினம் (ஜூலை 02) 15 வயது சிறுமி பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று மாலை சிறுமி வீடு திரும்பாததால், குடும்பத்தினர் சிறுமியை பல இடங்களில் தேடியுள்ளனர். ரூ.56,000 சம்பளத்தில் இஸ்ரோவில் வேலை.. மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க.!
சிறுமி பலாத்காரம்:
இதனையடுத்து, குடும்பத்தினர் சிறுமியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நவாப்கஞ்ச் காவல்நிலையத்தில் பணிபுரியும் கான்ஸ்டபிள் வினய் சவுகான், துப்பாக்கி முனையில் சிறுமியை மிரட்டி, காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி, ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்தது தெரியவந்தது. இதன்பின்னர், கான்ஸ்டபிள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கார் ஓட்டுநரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3