Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 20, மாண்டியா (Karnataka News): கர்நாடக மாநிலம், மாண்டியா (Mandya) மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவின் பாலஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரீத் (வயது 31). ரவுடியான இவர், நேற்று முன்தினம் (ஜனவரி 18) இரவு 11 மணியளவில், தனது தோட்டத்தில், நண்பர்கள் கார்த்திக், அர்ஜுன் கவுடாவுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை (Murder) செய்தனர். மேலும், அங்கிருந்த அர்ஜுன் கவுடாவை, மரத்தில் கட்டி வைத்து தடியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். Breaking: காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொலை செய்த விவகாரம்; "மரண தண்டனை" - நீதிபதிகள் தீர்ப்பு..!

ரவுடி கொலை:

இச்சம்பவத்தின் போது, உடனிருந்த நண்பர் கார்த்திக், தப்பியோடினார். படுகாயமடைந்த அர்ஜுன் கவுடா, மைசூரு கே.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட சுப்ரீத், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.