Template: Cow ate Plastic Result Chemical Milk

டிசம்பர், 10: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்கள் தோறும் புல், கீரை வகைகளை பசுக்களுக்கு (Cow) தீவனமாக அளித்து வந்தனர். இன்றளவில் கிராமங்களிலும் பாலிதீன் கவர் குப்பைகளுக்கு பஞ்சம் இல்லை. நகரங்களின் நிலைமையும் அங்கு வாழும் எஞ்சிய பசுக்களின் நிலைமையும் படுமோசம் என்று தான் கூற வேண்டும். இன்றளவில் நல்ல புல், கீரைகளை சாப்பிட்டு வளரும் பசுவின் எண்ணிக்கை சொற்ப அளவை சந்தித்துவிட்டன.

மனிதர்களை போல பசுக்களும் நாங்களும் அப்டேட் ஆகிவிட்டோம் என்பதை போல, மேய்ச்சலுக்காக அழைத்து செல்லும்போது கூட குப்பைத்தொட்டியை தேடி உணவை சாப்பிடுகிறது. குப்பையில் இருக்கும் கெட்டுப்போன உணவை சாப்பிடும் பசுவினால் வரும் பால் மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். தமிழகத்தை பொறுத்தமட்டில் பசுமாடு பால் வளர்ப்பு கிராமங்களில் பிரதான தொழிலாக இருக்கிறது.

கிராமப்புறங்களில் ஆவின் நுகர்வு மையங்களினால் சேகரிக்கப்படும் பால் & தனியார் பண்ணைகளின் பால் உற்பத்தி / நுகர்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பால் தொழிற்சாலைக்கு வந்ததும் பாஸிடிரைசேசன் முறையில் 160 டிகிரியில் பதப்படுத்தப்பட்டு கிருமியை நீக்கி விற்பனை தொடங்குகிறது. நகர்ப்புற பகுதிகளில் வீடுகளுக்கு நேரடியாக சென்றும் சிலர் பால் விற்பனை செய்கின்றனர்.

நகரங்களில் குப்பை தொட்டியில் கிடைக்கும் உணவுகள், பிளாஸ்டிக் கவர் (Plastic & Napkin) போன்ற தீனிகளை சாப்பிட்டு பால் கொடுக்கும் பசுக்களின் பாலினை நாம் குடித்தால் தீவனத்தின் மணம் மற்றும் தன்மை பாலில் காணப்பட்டு, புருசெல்லோசிஸ் என்ற நோய்த்தொரு கிருமி தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பசும் புற்கள், உலர் தீவனம் புண்ணாக்கு, தூய்மையான நீர் கொடுத்து வளர்க்கப்படும் பசுவின் பால் நறுமணத்துடன் இனிப்பாக இருக்கும். World Beautiful Places: கட்டாயம் உலகளவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் இதுதான்.. லிஸ்ட் ரெடி., கிளம்புங்க மக்களே..! 

Cow Milk

மேய்ச்சலுக்கு செல்லும் பசு நிலத்தில் இருக்கும் வெங்காயம் போன்ற களைகளை மேயும் சமயத்தில் பாலில் களையின் மணம் இருக்கும். இதனால் பாலின் நிறம் வேறுபடும். இதுவே பாலின் இயல்பு. இன்றுள்ள காலங்களில் நகரத்திலும், கிராமத்திலும் பசுக்களின் நிலைமை கவலைக்கிடம் தான். மேய்ச்சலுக்காக அவை அழைத்து செல்லப்படாமல் அவிழ்த்து விடப்படுவதால் மக்களிடமும், சாலையோரம் குப்பைத்தொட்டியிலும் உணவை தேடுகிறது.

இதில், குப்பையில் இருக்கும் பாலிதீன் முதல் நாப்கின் வரையில் அனைத்து கழிவுகளையும் சாப்பிடுகிறது. இதனால் பாலின் தரம் கேள்விக்குறியாகிறது. பால் வீட்டில் காய்ச்சப்படும் போது சாதரணமாக 100 டிகிரி சென்டிகிரேடில் கொதிக்கும். இக்கொதிநிலையிலும் நுண்ணுயிரிகள் சிலது அழியாது. இவை மனிதனின் உடலுக்குள் சென்றால் பின்விளைவுகள் ஏற்படும். அதேபோல, பாலினை குடிக்கும் நமக்கே உடல்நலக்குறைவு என்றால், பசுவின் நிலைமை மோசம்தான்.

இதுபோன்ற மாடுகளின் பாலினை சரியாக காய்ச்சல் குடித்து வந்தால் மனிதனுக்கு அனீமியா இரத்த சோகை ஏற்படும். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் குறைபாடு ஏற்படும். எதிர்கால நோய்களான எலும்புருக்கி போன்றவையும் ஏற்படலாம். மனிதர்களுக்கு பல நோய்கள் ஏற்படும்.

உலகில் தாய்ப்பாலுக்கு அடுத்தடியாக குழந்தைகளுக்கு நம்பி கொடுக்கப்படும் பசும்பாலில், மாடுகளை சரிவர கவனிக்காமல் விட்டால் எப்படியான தாக்கத்தினை அவை ஏற்படுத்தும் என்பதற்கு சாட்சியாக மேற்கூறிய செய்தி அமைத்துள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 11:40 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).