ஜனவரி 17, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் (Hyderabad) நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவி ஒருவர், முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அவர், அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்து படித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 15) அந்த மாணவி தனது அறையில் தனியாக இருந்தார். அப்போது, விடுதி கட்டிடத்தின் உரிமையாளரால் பணியமர்த்தப்பட்ட ஓட்டுநர் சாரதி என்பவர், குளிருக்கு பெட் சீட் கொடுக்க வேண்டும் எனக் கூறி அந்த அறையை தட்டியுள்ளார். Road Accident: கார், பேருந்து மீது லாரி மோதி விபத்து; 9 பேர் பரிதாப பலி..!
பெண் பாலியல் வன்கொடுமை:
இதனை நம்பி, அந்த பெண் கதவைத் திறந்துள்ளார். அப்போது, திடீரென சாரதி அறைக்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், இப்ராஹிம்பட்டினம் காவல்துறையினர் சாரதியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அடுத்த நாள் தேர்வுகள் இருந்ததால், அவருடன் தங்கியிருந்த சில மாணவிகள் வெவ்வேறு அறைகளில் இருந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனையறிந்து கொண்ட ஓட்டுநர், விடுதிக்குள் தனியாக இருந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3