ஜூன் 12, பெங்களூர் (Bangalore News): யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடுகள் அதிகரித்ததில் இருந்து, அதனை வைத்து பலரும் பணம் சம்பாரித்து வருகின்றனர். சிலர் உலகளவில் பயணம் மேற்கொண்டு தங்களின் விடீயோக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் நமது ஊர் யூடியூபர்களும், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் யூடியூபர்களும் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணியான யூடியூபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Dog Killed Child: மாற்றுத்திறனாளி சிறுவனை கடித்து கொன்ற தெருநாய்கள்; பெற்றோர்களே கவனமாக இருங்கள்., நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த யூடியூபர் பெட்ரா மோட்டா (Dutch Vlogger Pedro Mota), கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்பேட் (Chickpet) பகுதிக்கு வந்தார். அங்கு தனது கேமிராவில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்த நிலையில், அங்கிருந்த நவாப் ஹயாத் ஷெரிப் என்பவர் பெட்ரோவை தாக்கி இருக்கிறார்.
இதுகுறித்த சம்பவம் அவரின் வீடியோ கேமிராவில் பதிவாக, சம்பந்தப்பட்ட எல்லையில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று பெட்ரா புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் ஹயாத் மீது வழக்குப்பதிவு செய்தனர்.