Paracetamol Tablet (Photo Credit: Pixabay)

ஜூன் 26, கர்நாடகா (Karnataka News): பருவகாலங்களில் பலருக்கும் (Rainy Season Disease) காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்றவை ஏற்படத் தொடங்கிவிடும். மேலும், மழை காலங்களில் ஏற்படும் சில உடல்நலப் பிரச்சனைகளுக்கு பலரும் மருத்துவமனைக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடி மருந்தகத்தில் சுயமாக பாராசிட்டமால் (Paracetamol) மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதனை வலி நிவாரணியாக பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். Cooking Tips: செட்டிநாடு ஸ்டைலில் சுவையான காரக்குழம்பு செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.! 

பாராசிட்டமால் மாத்திரை உபயோகிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் :

இவ்வாறான பாராசிட்டமால் மாத்திரைகள், பல்வேறு ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்ட நிலையில், அவை உட்கொள்ள தகுதி இல்லாத மாத்திரைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், 65 வயது மேற்பட்ட நபர்களுக்கு இரைப்பை, குடல், இதயம், சிறுநீரகம் சார்ந்த கோளாறுகள் ஏற்படும் என ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பருவகாலங்களில் ஏற்படும் நோயில் இருந்து தப்பிக்கிறேன் என்ற பெயரில், அவ்வப்போது அதனை எடுப்பது, மருத்துவரின் அனுமதி இன்றி பயன்படுத்துவது நல்லதல்ல.

பாராசிட்டமால் மாத்திரைக்கு தடை :

இந்த நிலையில் கர்நாடக மாநில சுகாதாரத்துறை பாராசிட்டமால் மாத்திரைக்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் உடலை அதிக வெண்மை நிறமாக்கும் மாத்திரை மற்றும் மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. இது தொடர்பான முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில், கர்நாடக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பாராசிட்டமால் 650 உட்பட ஆபத்தான 15 வகை மாத்திரை, மருந்துகளை பயன்படுத்த மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் மாநிலம் முழுவதும் பாராசிட்டமல் மாத்திரை மருந்துகளை சேகரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.