Death File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 27, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள வெள்ளநாடு பகுதியைச் சேர்ந்தவர் அபிராமி பாலகிருஷ்ணன் (வயது 30). இவர் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் (Government Medical College Hospital) மருத்துவராக பணிசெய்து வந்துள்ளார். அவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்துள்ளார். Spoiled Cake Affected Childrens: பிறந்தநாளை சிறப்பிக்க கெட்டுப்போன கேக்: குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.. பெற்றோர்களே கவனம்..!

இந்நிலையில், அபிராமியின் பெற்றோர் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை எடுக்காத காரணத்தினால், அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது, அபிராமியின் அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் சடலமாக கிடந்துள்ளார். இதுதொடர்பாக, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அபிராமி அவரது உடலில் ஊசியால் சில மருந்துகளை செலுத்தியது தெரியவந்தது. மேலும், இது தற்கொலையாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர். இருப்பினும், பிரேத பரிசோதனை முடிவில் தான் உண்மை என்னவென்று அறியமுடியும் என்று கூறியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு அபிராமி, மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் வேறு மாநிலத்தில் வேலை செய்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.