ஏப்ரல் 22, பெலகாவி (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம், சவதத்தி பகுதியில் திருமணமான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் சொந்தமாக மளிகை கடை (Grocery store) ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், இந்த பெண்ணுக்கு ஆரிப் பாபேரி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து, அவர் அந்த பெண்ணிடம் பெலகாவியில் வேலை இருப்பதாக கூறி, அவரை அங்கு ஆரிப் பாபேரி கூட்டிச் சென்றுள்ளார். Papanasam Agasthiyar Falls: அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

பெலகாவிக்கு சென்ற பிறகு அங்கு ஒரு அறையில் பெண்ணை தங்கவைத்து, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அவரது செல்போனில் வீடியோ எடுத்து, தங்களது சமூகத்திற்கு மாற வேண்டும் என்றும், ஹிஜாப் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்திள்ளார். மேலும், இதனை செய்யாவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண் அவர்களிடன் இருந்து தப்பிச் சென்று, காவல்துறையினரிடம் நடந்தவைகளை பற்றி கூறி புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒரு தம்பதியை கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.