Masala Buttermilk (Photo Credit: Pixabay)

மார்ச் 28, சென்னை (Kitchen Tips): தமிழகத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்கும் நிலையில், அனைவரும் பலவிதமான குளிர்பானங்களை குடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில், இன்றைக்கு கோடை காலத்திற்கு ஏற்ற மசாலா மோர் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம். Tuberculosis Treatment: 2025-ஆம் ஆண்டுக்குள் காச நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் – மத்திய, மாநில அரசுகள் திட்டவட்டம்..!

தேவையான பொருட்கள்:

தயிர் - 300 கிராம்

சின்ன வெங்காயம் - 3

பெருங்காயம் - 3 கரண்டி

இஞ்சி - 2 துண்டு

சீரகம் - 2 கரண்டி

கறிவேப்பில்லை, கொத்தமல்லி - தேவையான அளவு

வெள்ளரிப்பிஞ்சு - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சின்ன வெங்காயம், பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பில்லை, கொத்தமல்லி, தயிர் 3 கரண்டி மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து மிக்சி ஜாரில் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர், இதனுடம் இருக்கின்ற தயிர் முழுவதையும் ஊற்றி நன்கு அரைத்து சேர்த்துக் கொள்ளவும். பிறகு, இதனை வடிக்கட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். மோரை ஒரு டம்ளரில் ஊற்றி வைத்துக்கொண்டு, பொடிப்பொடியாக நறுக்கி வைத்த வெள்ளெரிப்பிஞ்சு, கொத்தமல்லி தழைகளை லேசாக தூவிவிட்ட பின்பு அருந்தவும். கோடைகாலத்தில் அருமையான மசாலா மோர் ரெடி.