டிசம்பர், 10: பாம்புகளின் விரும்பி எலிகள் என்று கூறினாலும், அவைகளுக்கு தவளைகளில் என்றால் கொள்ளை பிரியம் இருக்கும். தவளையின் குரலை கேட்டு அமைதியாக ஊர்ந்து சென்று அதனை வேட்டையாடி சாப்பிடும்.
வயல்வெளிப்பகுதியில் பெரும்பாலும் பாம்புகள் தவளைகளை வேட்டையாடி சாப்பிடுவதை கண்கூடாக பார்க்கலாம். இன்னும் ஒருசிலரே மனிதாபிமானத்துடன் தவளையை காப்பாற்றியும் விடுவார்கள்.
நம் கண்ணெதிரில் இருந்து தப்பிக்கும் தவளை பிழைத்தால் போதுமென சென்றாலும், பாம்பு தனது பசியை போக்க வேறு உணவை தேடி சாப்பிடும். நிலைமை இப்படியிருக்க, பாம்பு ஒன்றின் மீது தவளை வழுக்கிக்கொண்டு பயணம் செய்யும் சுவாரசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. Daily Exercise: அடேங்கப்பா.. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள்.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!
The less you care,
The happier you will be?
(Even at the face of death) pic.twitter.com/KDKM5lhcwC
— Susanta Nanda (@susantananda3) November 7, 2022
இந்திய வனத்துறையில் பணியாற்றி வரும் அதிகாரி சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பாம்பின் மீது பக்குவமாக அமர்ந்த தவளை, அதன் தோள்களில் வழுக்கிக்கொண்டு பயணிக்கிறது.
10 நொடிகளே ஓடும் இவ்வீடியோவை பதிவிட்டுள்ள சுஷாந்த் நந்தா "நீங்கள் எவ்வளவு குறைவாக கவலைப்படுகிறீர்களோ, நீங்கள் மரணத்தின் முகத்திலும் அவ்வுளவு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.