Teenager Stabbed Five People (Photo Credit: @TheSouthfirst X)

பிப்ரவரி 11, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் (Bengaluru) இந்திரா நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஒருவர், வாடிக்கையாளர்களை கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக வைரலானது. தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர், 'சீரியல் கில்லர்' (Serial Killer) என்று செய்தி பரவியது. இந்த வீடியோ காவல்துறையினர் கவனத்திற்கு சென்றது. அந்த வீடியோவில், 'பானிபூரி விற்பனை செய்பவரிடம் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், பின் அவரை கத்தியால் வெட்டி, தடுக்க வந்த நபரையும் கத்தியால் குத்துவதும், இதனைப் பார்த்து, உணவகத்தில் சாப்பிட வந்தவர்கள் அலறி அடித்து ஓடுவதும், அதற்குள் மற்றொருவரையும் அந்த நபர் சரமாரியாக கத்தியால் குத்துவதும் பதிவாகியிருந்தது.  Mamta Kulkarni Video: மகாமண்டலேஷ்வர் பதவியை ராஜினாமா செய்த மம்தா குல்கர்னி.. சர்ச்சைகளுக்கு மத்தியில் வீடியோ வைரல்..!

குற்றவாளிக்கு வலை:

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்திரா நகர் பகுதியில் உள்ள உணவகத்தில் பிப்ரவரி 08ஆம் தேதி தாக்குதல் சம்பவம் நடந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, இந்திரா நகர் காவல்துறையினர் சம்பவம் நடந்த உணவகத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அதில், மொத்தம் ஐந்து பேரை அந்த நபர் தாக்கியது தெரிய வந்தது. இந்த காட்சிகள் ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. விசாரணையில், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கடம்பா (வயது 28), என்ற ரவுடி என்பதை கண்டுபிடித்தனர். கடம்பா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குடிபோதையில் தகராறு:

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், உணவகத்தில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், 'சீரியல் கில்லர்' இல்லை. அவர் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பொது மக்கள் உண்மை அறியாமல், பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் என அவர் கூறினார்.

வைரல் வீடியோ இதோ: