ஆகஸ்ட் 01, சென்னை (Chennai News): ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் உற்பத்தி & சுத்திகரிப்பு நிறுவனங்கள் நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன. கச்சா எண்ணெய் கிடைக்கும் அளவு, அதன் தேவை, உலகளாவிய பயன்பாடு மற்றும் சந்தை மதிப்பு, இதர செலவினங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாதத்தின் முதல் தேதியில் சமையல் எரிவாயு விலை (LPG Gas Cylinder Price August 2025) நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. New Rules From 1 August: ஆகஸ்ட் 1 முதல் யுபிஐ-ல் வரப்போகும் மாற்றங்கள்.. தெரிஞ்சிக்கோங்க மக்களே.!
சமையல் எரிவாயு விலை இன்று:
அந்த வகையில், மத்திய அரசின் தலையீடு காரணமாக வீட்டு உபயோகத்துக்கான 14 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு விலை இதுவரை மாற்றம் செய்யப்படாமல் ரூ.868.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ஏற்ற இறக்கத்துடன் ஒவ்வொரு மாதமும் மாற்றங்கள் இருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் சமையல் எரிவாயு விலை சென்னையில் ரூ.35.50 குறைந்து ரூ.1789 க்கு விற்பனை செய்யப்படுகிறது.