ஜூலை 06, ஸ்ரீநகர் (Jammu Kashmir News): காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் (Security Forces) பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வலைவீசி தேடி வருகின்றனர். Brinjal Gravy Recipe: சுவைமிகுந்த கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில், பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது, ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். பின்னர் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வலை வீசி தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
One soldier martyred in the ongoing #encounter in Jammu & Kashmir's #Kulgam district. Operations under way. pic.twitter.com/Rvc49PrZcD
— Bineet Kumar Chaubey (@bineetchaubey) July 6, 2024