ஆகஸ்ட் 08, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், லக்னோவின் தாகூர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், ஏழாம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை (Sexual Abuse) கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணித ஆசிரியரான மோஹித் மிஸ்ரா, மாணவியைத் தவறாகத் தொட்டு துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. கள்ளக்காதல் விவகாரம்; மனைவி கொடூரக் கொலை.. கணவர் உட்பட 3 பேர் கைது..!
ஆசிரியர் கைது:
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி, தனது தந்தையிடம் நடந்ததைக் கூறியதை அடுத்து, அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஆசிரியர் மோஹித் மிஸ்ராவைக் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், பள்ளியின் கழிப்பறைக்குச் செல்லும் மாணவியைப் பின்தொடர்ந்து சென்று, அத்துமீறித் தொடுவது, பாலியல் ரீதியாக அழுத்தம் கொடுப்பது போன்ற செயல்களில் ஆசிரியர் தொடர்ந்து ஈடுபட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் பாலியல் அத்துமீறல்கள்:
சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம், பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. பள்ளி நிர்வாகம் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3