Teenager Arrested In Mumbai (Photo Credit: @ANI X)

ஆகஸ்ட் 13, மும்பை (Maharashtra News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டா (Gonda) மாவட்டத்தைச் சேர்ந்த சயீப் ஜாஹித் அலி (வயது 29) என்பவர் கொலை வழக்கில் மும்பை குற்றப் பிரிவு (Mumbai Crime Branch) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (ஆகஸ்ட் 12) குர்லாவில் உள்ள பேலஸ் ரெசிடென்சி பார் அருகே முஸ்லீம் சக்கன் அலி என்ற ஆடை தொழிற்சாலை தொழிலாளி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குர்லா காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். Is It The 77th Or 78th Independence Day?: இந்தியாவின் 2024 சுதந்திர தின விழா 77ம் ஆண்டா? 78 ஆ?? விபரம் இதோ..!

இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அவரது சக ஊழியரான சயீப் ஜாஹித் அலி அவருடன் மது அருந்தச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் தாராவியில் இருந்து குர்லாவில் உள்ள மதுக்கடைக்கு ஆட்டோ ரிக்ஷாவில் (Rickshaw) சென்றுள்ளனர். அங்கு கட்டணத்தை யார் செலுத்துவது என்று இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அடிதடி நடந்துள்ளது. இதில், சக்கன் அலி கீழே விழுந்து அவரது தலையில் (Murder) காயம் ஏற்பட்டது. பின்னர், அவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, கல்யாண் ரயில் நிலையத்தில் சயீப் அலியை குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.