Woman Murder Case (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 25, காசியாபாத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தின் (Ghaziabad) சாஹிபாபாத் காவல்நிலையப் பகுதியில் உள்ள மோகன் நகரை சேர்ந்தவர் சோனியா (வயது 33). இவர், கடந்த ஜூன் 18ஆம் தேதி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். இதன்பிறகு, ஜூன் 21ஆம் தேதி பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தாய் திட்டியதால் ஆத்திரம்.. மகன் கொடூர செயல்..!

இன்ஸ்டா பழக்கம்:

இதுகுறித்த விசாரணையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஃபரூக்காபாத்தை சேர்ந்த கிஷன்பால் என்பவருடன் சோனியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சோனியாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. கடந்த ஒரு வருடம் முன்பு, காதலன் கிஷன்பால் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். தற்போது, ​​அவருக்கு மகள் உள்ளார். இந்நிலையில், சோனியா தனது மனைவியை விட்டு வெளியேறி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிஷன்பாலுக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.

இளம்பெண் கொலை:

தொடர்ந்து, காதல் விவகாரம் குறித்து குடும்பத்தினரிடம் கூறுவதாக மிரட்டி ஒவ்வொரு மாதமும் பணம் பறித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த ஜூன் 18ஆம் தேதி மதியம், அவர் அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று, குழந்தைகள் தூங்கச் சென்ற பிறகு, அவரது கழுத்தில் ஒரு துப்பட்டாவை வைத்து கழுத்தை நெரித்து கொலை (Murder) செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.