செப்டம்பர் 24, ஜான்சி (Uttar Pradesh News): இன்றைய இளம் தலைமுறையினரிடையே ரீல்ஸ் (Reel Video) மோகம் அதிகரித்து வருகின்றது. அதனால் பல விபரீதங்களும் நிகழ்கின்றன. இளைஞர்கள் தெருக்களில் ரீல்களை உருவாக்கி, பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கின்றனர். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் (Jhansi) இருந்து ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் சைக்கிளில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சாலையில் சென்றுக் கொண்டிருக்கிறார். அப்போது, இரு இளைஞர்கள் பைக்கில் வருகின்றனர். அதில், ஒருவர் இந்த முதியவரின் முகத்தில் ஃபாக் ஸ்பிரேயை (Spray) தெளித்து விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். MP Veena Devi's Son Dies: எம்பி வீணாதேவியின் மகன் உயிரிழப்பு.. சாலை விபத்தால் நடந்த கொடூரம்..!
இதனால், அந்த முதியவரின் முகத்தில் முழுவதுமாக வெள்ளை நுரை தெரிகின்றது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, பொதுமக்கள் கோபமடைந்து, இதில் ஈடுபட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, ஜான்சியின் நவாபாத் காவல்துறையினர் சம்மந்தப்பட்ட வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர்.
முதியவரின் முகத்தில் ஸ்பிரே அடித்த வாலிபர் கைது:
Youth sprayed on an old man on a bicycle for fun and making reels in Jhansi.
UP Police has arrested him and given him course on manners. His walk tells the intensity of course.pic.twitter.com/DBJKAZ8iQn
— Megh Updates 🚨™ (@MeghUpdates) September 22, 2024