Husband married his wife to her boyfriend in Bihar (Photo Credit: @firstbiharnews X)

டிசம்பர் 20, பாட்னா (Bihar News): பீகார் மாநிலம், சஹர்சா பகுதியை சேர்ந்தவர் அனில். இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு ஜோதி ராணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் (Love Marriage) செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், ஜோதி ராணி கடந்த சில மாதங்களாக பிரதேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர். பிரதேஷ் என்பவருக்கு திருமணமாகி ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். Road Accident: "மச்சா ஒண்ணா போலாம்" - 100ல் போனதால், 108 வருவதற்குள் துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.. 18 வயதில் சோகம்..!

வினோத சம்பவம்:

இந்நிலையில், ஜோதி ராணியின் கணவருக்கு இந்த காதல் விவகாரம் தெரியவர, அவர் இவர்களுக்கு திருமணம் செய்துவைத்தார். ஏற்கனவே, மூன்று குழந்தைகளுக்கு தாயான அவர், இரண்டு குழந்தைகளின் தந்தையான தனது காதலனை கணவர் விருப்பப்படி திருமணம் செய்துகொண்டார். இந்த வினோத சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ இதோ: