Bike Auto Accident (Photo Credit: @telanganaawaaz X)

டிசம்பர் 20, சித்தூர் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், சித்தூர் (Chittoor) அருகே அரகொண்டா சாலையில் சீதாம்ஸ் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் ஆட்டோ மீது (Bike Accident) மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Bipin Rawat: பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் திடீர் திருப்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

மாணவர்கள் 2 பேர் பலி:

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர்கள் மைனம் குண்டலப்பள்ளியை சேர்ந்த ஹர்ஷா (வயது 17), முத்ரப்பள்ளியை சேர்ந்த சாய் தேஜா (வயது 18) என அடையாளம் காணப்பட்டார். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.