Gurugram Viral Video (Photo Credit: @DharamvirNews X)

ஜூலை 29, குருகிராம் (Haryana News): ஹரியானா மாநிலம், குருகிராமில் (Gurugram) உள்ள செக்டார் 37இல் இருந்து வெளியான ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வீடியோவில், ஒரு தொழிலாளி 4 பேர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு, பின்னர், தலைகீழாக தொங்கவிடப்பட்டு அடித்து துன்புறுத்துகின்றனர். இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த வீடியோ தற்போது வைரலானது. வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

4 பேர் கைது:

இதன் வீடியோ இணையத்தில் வைரலானவுடன், குருகிராம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். வீடியோவில் தாக்கப்பட்ட நபர் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி என்றும், அவரது ஒப்பந்ததாரரால் தாக்கப்படுகிறார் என்றும் கூறுகின்றனர். ஆதாரங்களின்படி, ஒப்பந்ததாரர் ஹரியானாவைச் சேர்ந்த ஒரு மத்திய அமைச்சருக்கு நெருக்கமானவர் என்றும், அவரது மனைவி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, குருகிராம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறைக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை என காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ இதோ: