Husband Burned to Death in UP (Photo Credit: @TrueStoryUP X)

ஜூலை 29, பாக்பத் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பாக்பத்தில் (Baghpat) உள்ள காந்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் வேத்பால். இவரது மகன் சன்னி ஒரு வருடத்திற்கு முன்பு காதி காங்கிரான் கிராமத்தைச் சேர்ந்த அங்கிதாவை திருமணம் செய்துகொண்டார். கடந்த ஜூலை 22ஆம் தேதி அன்று, சன்னி தனது பைக்கில் தஹா வழியாக ஹரித்வாருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, காதி காங்கிரான் கிராமத்திற்குச் செல்லும் வழியில், 4 பேர் சன்னியை நிறுத்தி அவரைப் பிடித்து அடித்து தங்கள் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். காதலி கழுத்து நெரித்து கொடூர கொலை.. காதலன் கைது..!

வாலிபர் எரித்துக் கொலை:

அங்கு, அவர்கள் சன்னி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால் சன்னி பலத்த தீக்காயம் அடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்ததும், குடும்பத்தினர் எரிந்துபோன நிலையில் சன்னியை மீட்டு மீரட் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கிருந்து அவரது நிலை மோசமாகியதால் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக (Murder) உயிரிழந்துவிட்டார். அவரது தந்தை வேத்பால் அளித்த புகாரின் பேரில், சன்னியின் மனைவி அங்கிதா, காதலன் அய்யூப் மற்றும் மாமா சுஷில் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.