
பிப்ரவரி 11, சூரத் (Gujarat News): குஜராத் மாநிலம், சூரத்தில் (Surat) உள்ள ஃபவுண்டன்ஹெட் பள்ளியில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், பிரியாவிடை விழாவில், பிஎம்டபிள்யூ (BMW) மெர்சிடிஸ் போன்ற சொகுசு கார்களைப் பயன்படுத்தி சாலைகளில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்தனர். வீடியோவில் பதிவான இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, போக்குவரத்து சட்ட மீறல்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஓல்பாட் தாலுகாவின் குன்கானி கிராமத்தில் உள்ள ஃபவுண்டன்ஹெட் பள்ளி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை விருந்தின் (Farewell Day Celebration) ஒரு பகுதியாக, இந்நிகழ்வு அமைந்தது. Minor Girl Rape Case: 8ஆம் வகுப்பு மாணவி பலாத்காரம் செய்து கொலை.. ஆட்டோ ஓட்டுநர் கைது..!
மாணவர்கள் கார் ஸ்டண்ட்:
இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சூரத் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். மேலும், போக்குவரத்து காவல்துறை மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்கப் பிரிவுகள் சம்பந்தப்பட்ட வாகனங்களின் பதிவு எண்களை அடையாளம் கண்டு அவற்றைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளன. அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்திடம் விளக்கங்களைக் கேட்டுள்ளனர்.
போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை:
அப்போது, பள்ளியின் நிர்வாகத் தலைவர் தெளிவான அறிக்கையை வெளியிட்டார். அதில், 'இது எங்கள் திட்டம் அல்ல. பெற்றோர்களும், மாணவர்களும் இந்த கார்களை எந்த அனுமதியும் இல்லாமல் கொண்டு வந்தனர். இந்நிகழ்வுக்காக நாங்கள் ஒரு பள்ளி பேருந்தை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், யாரும் அதைப் பயன்படுத்தவில்லை. பள்ளி வளாகத்திற்குள் ஒரு காரைக் கூட நாங்கள் அனுமதிக்கவில்லை (Traffic Violation) என குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சூரத் காவல்துறை பரிசீலித்து வருகிறது.
வீடியோ இதோ:
સુરતમાં ફાઉન્ટન હેડ સ્કૂલના વિદ્યાર્થીઓના સીનસપાટા, ફેરવેલમાં 30 જેટલી લક્ઝુરિયસ કાર સાથે પહોંચ્યા#Surat #Gujarat #ViralVideo #GujaratSamachar pic.twitter.com/6VluhUGnwD
— Gujarat Samachar (@gujratsamachar) February 10, 2025