
பிப்ரவரி 11, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் (Kolkata) எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர், நள்ளிரவில் பலாத்காரம் (Rape and Murder) செய்து கொல்லப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், நியு டவுன் பகுதியை சேர்ந்த மாணவி, சரியாக படிக்கவில்லை என தாயார் திட்டியதால், இரவு 10 மணிக்கு மேல் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றார். பின், வீடு திரும்ப முடியாமல் நள்ளிரவில் பரிதவித்தபோது, அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநரிடன் தன்னிடம் பணம் இல்லை என்றும், வீட்டில் விடும்படியும் கூறியுள்ளார். Teenager Stabbed Five People: ஹோட்டலில் 5 பேருக்கு கத்திக்குத்து.. ரவுடிக்கு வலைவீச்சு..!
மாணவி பலாத்காரம்:
இதனையடுத்து, மாணவியை ஆட்டோவில் ஏற்றிய சவுமித்ரா ராய், மற்ற பயணிகளை இறக்கி விட்ட பின், மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின், மாணவியை கழுத்தை நெரித்துக் கொன்றார். இதனிடையே, தன் மகள் காணாமல் போனதாக அவரது தாயார் அளித்த புகாரின்பேரில், கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, கடைசியாக மாணவியை அழைத்துச் சென்ற சவுமித்ராவை பிடித்து விசாரணை நடத்தினர்.
ஆட்டோ ஓட்டுநர் கைது:
இதில், அவர் நடந்தவற்றை ஒப்புக்கொண்டார். பின், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைதான சவுமித்ரா மீது ஏற்கனவே பாலியல் வழக்குகள் உள்ளன. மேலும், எட்டு மாதம் சிறையில் இருந்துள்ளதும் தெரியவந்தது. அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3