ஆகஸ்ட் 10, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், சிவமொக்கா (Shivamogga) மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபூர் தாலுகா தர்லகட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கிபாய் (வயது 50). கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, வீட்டில் வளர்த்த பூனை (Cat Bite) இவரது காலில் கடித்துள்ளது. பின்னர், அந்த பெண் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டுள்ளார். ஒரு ஊசி போட்ட பிறகு குணமடைந்து விட்டதால், அவர் அதன் பிறகு உரிய சிகிச்சையை மேற்கொள்ளவில்லை. இதன்காரணமாக, பூனை கடித்ததில் ரேபிஸ் நோயால் (Rabies Infection) பாதிக்கப்பட்ட அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். Jeep Swept Away In Flood: உத்தரகாண்ட்டில் கனமழை; வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஜீப்.. வீடியோ வைரல்..!
ஒரு விலங்கின் உமிழ்நீர் மற்றொரு விலங்கு அல்லது மனிதனின் சளி சவ்வுடன் தொடர்பு கொண்டால், அது ரேபிஸ் நோய் தொற்று பரவ வழிவகுக்கும். மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பெரும்பாலும் நாய் கடியால் ஏற்படுகிறது. இந்நிலையில், பூனையால் பரவிய ரேபிஸ் தொற்றால் அந்த பெண் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் விலங்கு கடித்தால் ஏற்படும் காயங்களில் 2-50 சதவிகிதம் பூனை கடித்தால் ஏற்படுகிறது, நாய் கடிக்கு அடுத்தபடியாக, பூனை கடித்தால் ரேபிஸ் வைரஸ் தொற்று மற்றும் பார்டோனெல்லா, புருசெல்லா, லெப்டோஸ்பைரா மற்றும் கேம்பிலோபாக்டர் என பல பாக்டீரியா தொற்றுகள் உள்ளன. பூனை கடித்தால் தொற்று பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்பு நாய் கடியை விட 2 மடங்கு அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.