Hostel Warden Brutally Attacks Girl Students: வார்டனா அது? ராட்சசி போல மாணவிகளை துன்புறுத்திய கொடூரம்; பெற்றோர்கள் குமுறல்.!
விடுதியில் தங்கியிருந்து பயின்று வரும் மாணவிகளை, வார்டன் ராட்சசி போல கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது. மாணவிகளின் உடல்களில் ஏற்பட்டுள்ள காயங்கள் பெற்றோர்களை பதறவைத்துள்ளது.
ஆகஸ்ட் 05, கஜினி (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் (Kasturba Gandhi Balika Vidyalaya) மாவட்டம், கஜினி, உஸ்வான் பாபு பகுதியில் கஸ்தூரிபா காந்தி வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை, வார்டன் கொடூரமாக தாக்கிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின. மேலும், அவர் தாக்கியதில் காயமடைந்த மாணவிகளின் உடலில் இருந்த காயமும் அதிர்ச்சியை தந்தன. Stone Pelting on Moving Train: விரைவு இரயில் மீது கல்வீசி தாக்குதல்; பயணி காயம்.. பீகாரில் பகீர் சம்பவம்.!
துறை ரீதியான விசாரணை:
இந்த விஷயம் குறித்த தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் பலரும் விடுதி வளாகத்தில் திரண்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்துவதாக உறுதி அளித்தனர். மேலும், மாவட்ட கல்வி அதிகாரி ராமேந்திரா சிங், துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார். வீடியோ வைரலாந்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி காவல் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டபோது, வார்டன் தன்னை நிரபராதி என கூறி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவிகள் உடலில் தழும்புகளாக காயங்கள்:
यूपी के गोरखपुर में कस्तूरबा गांधी बालिका विद्यालय में छात्राओं के साथ बर्बरता की गई. खराब खाने की शिकायत करने पर भड़की वार्डन ने बच्चियों को डंडे से बेरहमी से पीटा. बच्चियों को हाथ, पीठ, सीने और शरीर के अन्य हिस्सों पर जख्म हो गए. इस घटना का एक वीडियो भी सामने आया है.… pic.twitter.com/tbe0Ym7xPU
— ABP News () August 4, 2024
(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 11:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

