Minor Girl Rape in UP (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 12, கான்பூர் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் (Kanpur) 6 வயது சிறுமியை கடத்தி, பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்து, செங்கல்லால் தலையை உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணையில், காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், சிவம் என்பவர் அடையாளம் காணப்பட்டார். Ahmedabad Plane Crash: விழுந்து நொறுங்கிய விமானத்தில் முன்னாள் முதல்வர்? பரிதவிப்பில் குடும்பத்தினர்.!

சிறுமி பாலியல் வன்கொடுமை (Minor Girl Rape):

ஒரு வீடியோவில், அவர் சிறுமியை தனது பைக்கில் அழைத்துச் செல்வதும், மற்றொரு வீடியோவில், அவர் சிறுமியை தோளில் சுமந்து செல்வதும் காணப்பட்டது. இதனையடுத்து, குற்றவாளியை பிடிக்க முற்படும் போது, அவர் தப்பிச் செல்ல முயன்றார். இதனால் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை என்கவுண்டரில் மடக்கி பிடித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தலை எலும்புகள் உடைந்துள்ளன. 40 தையல்கள் போடபட்டு, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடரும் குற்ற சம்பவங்கள்:

நாடு முழுவதும் பாலியல் குற்ற சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும், குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3