Advertisement
 
புதன், ஜனவரி 07, 2026
சமீபத்திய கதைகள்
1 month ago

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. பார்ட்டியில் போதைப்பொருள் கொடுத்து கொடூரம்..!

டெல்லியில் பார்ட்டியில் போதைப்பொருள் கலந்து கொடுத்து, இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை (Gang Rape Case) செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா Rabin Kumar | Aug 14, 2025 05:47 PM IST
A+
A-
Gang Rape (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 14, டெல்லி (Delhi News): தலைநகர் டெல்லியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 24 வயது இளம்பெண் ஒருவர், தனது தோழியின் அழைப்பின் பேரில், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டார். பார்ட்டியில் அந்தப் பெண்ணுக்கு பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மயக்கமடைந்த அவரை, அங்கிருந்த சில ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை (Gang Rape) செய்துள்ளனர். பி.பார்ம் மாணவர் சுட்டுக்கொலை.. 6 பேர் மீது வழக்குப்பதிவு..!

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை:

இதன்பின்னர், மயக்கம் தெளிந்து வீட்டிற்குத் திரும்பிய அப்பெண், தனக்கு நடந்த கொடுமை குறித்து பஞ்சாபி பாக் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3


Show Full Article Share Now