ஆகஸ்ட் 14, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட் (Meerut) மாவட்டத்தில் உள்ள ஹஸ்தினாபூர் கணேஷ்பூரைச் சேர்ந்தவர் உஜ்வல் சர்மா (வயது 24). இவர், பி.பார்ம் பயின்று வந்தார். இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்களால் இவர் சுட்டுக் (Shot Dead) கொல்லப்பட்டார். இச்சம்பவம் ஹஸ்தினாபூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து உஜ்வலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஹஸ்தினாபூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், ஹஸ்தினாபூரைச் சேர்ந்த கௌரவ், ஷைகி என்கிற சௌரப், சைஃப்பூரைச் சேர்ந்த நீது, துஷார், சுன்முன் மற்றும் குட்டு ஆகிய 6 பேர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. Suresh Raina: ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம்; சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்..!
பரபரப்பு வாக்குமூலம்:
இதன் முதற்கட்ட விசாரணையில், உஜ்வலுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதமே இந்தக் கொலைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. உஜ்வலுடைய தாயார் பாப்லி அளித்த வாக்குமூலத்தில், "சில மாதங்களுக்கு முன்பு என் மகனுக்கும் இந்த நபர்களுக்கும் இடையே ஒரு தகராறு நடந்தது. அப்போது, அவர்கள் என் மகனைத் தாக்கினர். அன்றிலிருந்து அவர்கள் என் மகன் மீது தீராத பகையுடன் இருந்தனர்" என்று தெரிவித்துள்ளார். தற்போது, இந்த வழக்கை காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.