டிசம்பர், 6: இன்றுவரை PAN - Aadhar இணைக்காதவர்கள் ரூ.1000 அபராதம் செலுத்தி அதனை இணைத்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு கடந்தால் பேன் கார்டு இரத்து செய்யப்படலாம்.
இந்திய திருநாட்டில் ஒவ்வொரு நபரும் சம்பாதிக்கும் பணத்தில், அரசுக்கு சரியான அளவு வருமான வரி செலுத்துகிறார்களா? என்பதை ஓரணியில் கொண்டுவந்து கண்காணிக்க, கடந்த 1976ல் PAN Card இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைவைத்து ஒவ்வொருவரின் வங்கிக்கணக்குகளும் கண்காணிக்கப்படுகிறது.
PAN Card-ஐ போலவே ஆதார் கார்டு மத்திய அரசினால் தனிமனிதனின் அடையாளத்திற்காக கட்டாயமாக்கப்பட்டது. PAN Card மற்றும் ஆதார் கார்டை பயனர்கள் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், கொரோனாவுக்கு முன்னரில் இருந்து அரசு மக்களை எச்சரித்து வருகிறது. School & College Student: அதிகரிக்கும் பள்ளி & கல்லூரி மாணவிகள் மீதான வன்முறை.. ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டியது என்ன?.!
கடந்த ஏப்ரல் 2022 ல் இருந்து ஜூன் 30, 2022 வரையில் ஆதார் - பேன் கார்டை இணைப்போர் ரூ.500 அபாரதத்துடன் இரண்டு ஆவணத்தையும் இணைக்க வேண்டும். ஜூன் மாதத்திற்கு பின்னர் ஆதார் - பேன் கார்டை (Aadhar Pan Link) இணைத்தால் ரூ.1000 அபராதரம் செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை எச்சரித்து இருந்தது. தற்போது அக்டோபர் மாதம் பாதி முடிவடைந்துவிட்டது.
ஆதார் - பேன் கார்டு இணைக்காதவர்கள் முதலில் அரசின் (வருமானவரித்துறையின்) அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.incometax.gov.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில், Link ஆதார் என்ற இடத்திற்கு சென்று இணைப்பை தேர்வு செய்து அதில் கேட்கப்படும் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
விபரங்களை சரியாக கொடுத்தபின், அதனை உறுதி செய்து I Validate Aadhar Details என்ற இணைப்பை தேர்வு செய்து Continue கொடுத்தால் நாம் பதிவு செய்த செல்போன் நம்பருக்கு OTP வரும். அதனை தேர்வு செய்து அபராத தொகையை செலுத்தியதும் ஆதார் - பேன் கார்டுகள் இணைக்கப்படும்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 6,2022 06:32 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).