ஜனவரி 11, சண்டிகர் (Punjab News): பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் (Ludhiana) மேற்கு தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ குர்பிரீத் கோகி (வயது 58), நேற்று (ஜனவரி 10) இரவு தோட்டா காயங்களுடன் விழுந்து கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். Section 498A Misuse: ஆயுதமாக்கப்படும் வரதட்சணை தடுப்பு சட்டம்.. பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்.!
எம்எல்ஏ மரணம்:
பின்னர், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், உரிமம் பெற்ற துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது, தவறுதலாக தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகவும், அவரது தலையில் தோட்டாக் காயங்கள் ஏற்பட்டதாகவும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக உயர்மட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குர்பிரீத் கோகி (MLA Gurpreet Gogi), கடந்த 2022ஆம் ஆண்டு ஆம்ஆத்மி கட்சியில் சேர்ந்தார். பின்னர், நடந்த சட்டசபை தேர்தலில், லுாதியானா தொகுதியில் 2 முறை எம்எல்ஏ ஆன காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாரத் பூஷன் ஆஷூவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.