Doctor Drowned in Tungabhadra River (Photo Credit: @AmitSUpadhye X)

பிப்ரவரி 21, கொப்பால் (Karnataka News): தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர் அனன்யா மோகன் ராவ் (வயது 26). பெண் மருத்துவரான இவர், தோழியர் அஷிதா, சாத்விக் ஆகியோருடன், நேற்று முன்தினம் (பிப்ரவரி 19) கர்நாடக மாநிலம், கொப்பால் (Koppal) மாவட்டத்தில் கங்காவதியில் உள்ள சானாபூருக்கு சுற்றுலாவிற்கு சென்றனர். அங்கு, சானாபூர் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளனர். 20-Year-Old Girl Dies: கழுத்தில் விழுந்த 270 கிலோ.. 20 வயது பெண்ணுக்கு ஜிம் பயிற்சியில் நேர்ந்த சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!

ரீல்ஸ் மோகம்:

இதனையடுத்து, அன்று மாலை துங்கபத்ரா ஆற்றில் (Tungabhadra River) மூவரும் குளிக்கச் சென்றனர். அப்போது, 'ரீல்ஸ்' எடுக்க விரும்பிய அனன்யா, அங்குள்ள பாறையின் மீது இருந்து ஆற்றில் குதித்தார். ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், குதித்த வேகத்தில் மேலே வரமுடியாமல் தவித்தார். இதனைப் பார்த்த தோழி, உதவிக்கு கூச்சலிட்டனர். அதற்குள், அனன்யா நீரில் மூழ்கினார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பெண் மருத்துவர் சடலமாக மீட்பு:

இந்நிலையில், நேற்று உள்ளூர் நீச்சல் வீரர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில், பாறைகளுக்கு இடையே பெண் மருத்துவரின் உடல் சிக்கியிருந்தது தெரிந்தது. பல மணிநேர போராட்டத்துக்குப் பின், அவரது உடலை மீட்டனர். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ இதோ: