ஜூலை 29, புதுடெல்லி (NewDelhi): மணிப்பூரில் நடைபெற்ற தொடர் கலவரம், அதனைதொடர்ந்த பெண்களின் நிர்வாண ஊர்வலம் (Manipur Violence & Manipur Women Naked) தொடர்பான விவகாரம் இந்திய அளவில் மட்டுமல்லாது உலகளவிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ள இந்திய எதிர்க்கட்சிகள், தங்களது குழுவுடன் இன்று மணிப்பூர் செல்கிறது.
எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் (Congress INDIA Alliance) தலைமையிலான INDIA கூட்டணி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பல மாநிலங்களில் தங்களது கூட்டணியின் கூட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் கலவரம் மற்றும் கொடுமை தொடர்பாக பாராளுமன்றத்தில் தொடர் கேள்விகளை எழுப்பி அமளி செய்து வரும் எதிர்க்கட்சிகள், மணிப்பூருக்கு நேரடியாக செல்லவுள்ளது. Chennai HC On NLC Issue: “சோழநாடு சோறுடைத்து” – என்.எல்.சி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி., முழு விபரம் உள்ளே.!
INDIA-வின் 16 கட்சியை சேர்ந்த 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிடுகின்றனர். ராஜ்யசபா மற்றும் லோக்சபாவை சேர்ந்த எம்.பிக்கள் கே சுரேஷ், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, கௌரவ் கோகோய், ராஜீவ் ரஞ்சன் லாலன் சிங், சுஷ்மிதா தேவ், கனிமொழி கருணாநிதி, சந்தோஷ் குமார், ஏஏ ரஹீம், பேராசிரியர் மனோஜ் குமார் ஜா,
ஜாவேத் அலி கான், மஹுவா மாஜி, பிபி முகமது பைசல், அனீல் பிரசாத் ஹெக்டே, இடி முகமது பாஷே , என்கே பிரேமச்சந்திரன், சுஷில் குப்தா, அரவிந்த் சாவந்த், டி ரவிக்குமார், திரு தொல் திருமாவளவன், ஜெயந்த் சிங் மற்றும் பூலோ தேவி நேதம் ஆகியோர் செல்லுகின்றனர்.