Sexual Assault On Young Woman: 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. 85 வயது முதியவர் அத்துமீறல்..!
மும்பையில் 85 வயது முதியவர் ஒருவர், தனது வீட்டில் வேலை செய்யும் 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 17, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், மும்பை மலபார் ஹில்லில் (Malabar Hill) வசிக்கும் 85 வயது முதியவர், தனது குடியிருப்பில் வேலை செய்து வந்த 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஓய்வு பெற்ற தொழிலதிபரான இவர், வயது முதிர்வு காரணமாக இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், சட்ட விதிகளின்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Husband Kills Wife: வரதட்சணை கொடுமையால் பெண் கொலை.. கொடூர சம்பவம் செய்த கணவன் தலைமறைவு..!
இதுகுறித்த விசாரணையில், இளம்பெண் கடந்த செப்டம்பர் 09-ஆம் தேதி முதல், மலபார் ஹில்லில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்ய தொடங்கியுள்ளார். இந்நிலையில், செப்டம்பர் 11-ஆம் தேதி அன்று காலை 9 மணியளவில் முதியவரின் மனைவி குளிக்கச் சென்றுள்ளார். அவர்களின் மகள் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது, அந்த முதியவர் இளம்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டுள்ளார். மேலும், அவரை வலுக்கட்டாயமாக இழுத்து பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்துள்ளார்.
இதுதொடர்பாக செப்டம்பர் 12-ஆம் தேதி மலபார் ஹில் காவல்நிலையத்தில் அந்த இளம்பெண் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வயது முதிர்வு காரணமாக சட்ட விதிகளின்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணையின் முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
(The above story first appeared on LatestLY on Sep 17, 2024 12:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

