Jan Calender (Photo Credit: Instagram)

ஜனவரி 15, சென்னை (Chennai News): உலகில் வாழும் உயிரினங்களுக்கு, தனது கதிர்களின் வாயிலாக படியளந்து இன்மை புகுத்திடும் கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டின் தை மாதத்தின் முதல் நாள் தைத்திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் உழவுக்கு உறுதுணையாக இருந்து, உலகத்துக்கே விடியலை வழங்கிடும் கதிரவனை போற்றி பொங்கல் வைத்து வழிபாடுகள் நடக்கும். நேற்று தைப்பொங்கல் 2025 பண்டிகை சிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் திருவள்ளுவர் நாளாகவும் (Thiruvalluvar Day) சிறப்பிக்கப்படுகிறது. TikTok Ban: அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலிக்கு தடை.. காரணம் என்ன?!

வங்கிகளுக்கு விடுமுறை:

1333 திருக்குறள்கள் மூலம் வாழ்க்கையின் அனைத்து நெறிகளையும் கற்பித்துச் சென்றவர் திருவள்ளுவர். தலைவர்கள் பலரும் தங்களுடைய உரைகளின்போது இன்றளவும் திருக்குறளை மேற்கொள் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் சிறப்பிற்காக இன்று வங்கிகள், வங்கி கிளைகள், தலைமை அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த விடுமுறை நாட்களில் ஏடிஎம் (ATM) சேவைகள் பெரும்பாலும் தொடர்ந்து செயல்படும். இதேபோல், நெட் பேங்கிங் (Net Banking) மற்றும் மொபைல் வங்கி சேவைகள் இந்த விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து செயல்படும்.