Bhuma Akila Priya | CCTV Visuals (Photo Credit: @TeluguScribe X)

மே 15, அல்லகாடா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள நந்தியால் மாவட்டம், அல்லகாடா பகுதியை சேர்ந்தவர் பூமா அகிலபிரியா (Bhuma Akhila Priya). அல்லகாடா தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான இவர், தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்து வருகிறார். அம்மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் முந்தைய ஆட்சிக்காலத்தில் பணியாற்றி இருந்தார். கடந்த 2014ம் ஆண்டு அரசியலில் களமிறங்கி ஒய்.எஸ். ஆர் காங்கிரசில் தன்னை இணைத்துக்கொண்டவர், 2016ல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். இவர் அல்லகடா நகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவில் இவரது பாதுகாவலர், வீட்டின் முன்பு வைத்து மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். FB Insta Down: உலகளவில் முடங்கியது பேஸ்புக், இன்ஸ்டாகிராம்.. பயனர்கள் அவதி.! 

முன்னாள் அமைச்சரின் (Bhuma Akhila Priya Bodygaurd Attacked) பாதுகாவலரை கொலை செய்ய முயற்சி: பூமா அகிலபிரியாவின் பாதுகாவலர் நிகில் என்பவர் வீட்டின் வெளியே நின்றுகொண்டு இருந்த நிலையில், அதிவேகத்தில் வந்த கும்பல் ஒன்று அவரின் மீது காரை மோதவிட்டுள்ளது. பின் அவரை கொலை செய்யவும் முயற்சி நடந்த நிலையில், பாதுகாவலர் அதிஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பினார். அவர் வீட்டிற்குள் வந்துவிட்டதால், காரில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இந்த விஷயம் தொடர்பான பதைபதைப்பு சிசிடிவி காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கும்பல் கைதான பின்னரே, கொலை முயற்சி சம்பவத்திற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், நந்தியாலா பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில், கட்சியின் மூத்த தலைவரான ஏ.வி சுப்பா ரெட்டி என்பவரை நிகில் தாக்கியதாக தெரியவருகிறது. இதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதலில் கொலை முயற்சி சம்பவம் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காவல்துறையினர் பாதுகாப்பும் அப்பகுதியில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

கொலை முயற்சி சம்பவத்தின் காட்சிகள்: