Forced Abortion: கட்டாய கருக்கலைப்பு.. பரிதாபமாக உயிரிழந்த 24 வயது பெண்..!
புனேயில் 24 வயது பெண் கட்டாய கருக்கலைப்பு செய்யும் போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 25, புனே (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலம், புனே (Pune) மாவட்டத்தில் இந்தாபூர் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள பண்ணையில், 24 வயது பெண் ஒருவர் கருக்கலைப்பு (Abortion) செய்யும் போது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 23) நிகழ்ந்துள்ளது. Car Rams Trailer Truck: விரைவு சாலையில் லாரி மீது கார் மோதியதில் 7 பேர் பலி.. சுக்குநூறான கார்.. பதறவைக்கும் வீடியோ..!
இதுகுறித்த விசாரணையில், கடந்த 2017-ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன்பின் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, 2021-ஆம் ஆண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில், 3-வது முறையாக அந்த பெண் கர்ப்பமானார். 4 மாத கர்ப்பிணியாக (Pregnant) இருந்த சமயத்தில், கருவில் இருந்த குழந்தை பெண் என அறிந்த அவரது குடும்பத்தினர், கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தனர்.
இதன்பின்னர், அவரது கணவரும் பெற்றோரும் சேர்ந்து மருத்துவரை வீட்டிற்கு வரவழைத்து இளம்பெண்ணை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியுள்ளனர். அப்போது, அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் மற்றும் அவரது தந்தையை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 25, 2024 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

