Bahuda River bridge Collapsed in Andhra | Visuals from Spot (Photo Credit: ANI)

மே 03, ஸ்ரீகாகுளம் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டம், இச்சபுரம் பகுதியில் பஹுடா ஆறு செல்கிறது. இந்த ஆற்றை கடக்க ஆற்று மேம்பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், இன்று காலை ஆற்றை கடந்து 70 டன் பாரம் கொண்ட கற்களை ஏற்றிய கனரக லாரி பயணம் செய்தது. அப்போது, பாலம் கனகர லாரியின் எடையை தாங்க இயலாது உடைந்தது. Chithirai Festival 2023: கோலாகலமாக நடைபெற்றது மதுரை சித்திரை திருவிழா.. போட்டிபோட்டு தேரை வடம்பிடித்து இழுத்து கொண்டாடிய மக்கள்.!

இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித காயமும் இல்லை என்றாலும், அதிக பாரம் ஏற்றி சென்றதன் காரணமாக பாலம் இடிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவ்வழித்தட பாதை மூடப்பட்டு, மாற்று பாதையில் வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. விபத்து குறித்து ஸ்ரீகாகுளம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.