செப்டம்பர் 27, கொல்லம் (Kerala News): திங்கட்கிழமை அன்று, கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் தான் மர்ம நபர்களால் தாக்கப்பட்டதாக புகார் அளித்திருந்தார். ஆனால் அந்த புகார் தான் பிரபலமாவதற்காக தன் நண்பரோடு சேர்ந்து அவர் நடத்திய நாடகம் என்பது தெரிய வந்திருக்கிறது.
35 வயதான ராணுவ வீரர் ஷைன் குமார், ஓணம் பண்டிகை விடுமுறைக்காக கொல்லத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு வந்திருக்கிறார். பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில் இவர் காவல் நிலையத்தில் பொய் புகார் அளித்திருக்கிறார்.
இவர் கடக்கால் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஞாயிற்றுக்கிழமை தனது கிராமத்தில் அவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சிலர் அவரை வழிமறித்து, போதையில் விழுந்து கிடக்கும் தங்களது நண்பனுக்கு உதவி செய்ய அழைத்ததாக கூறியிருந்தார்.
அவர்களுடன் சென்ற ஷைன் குமாரை, அந்த ஆறு பேரும் சேர்ந்து தாக்கி, சட்டையைக் கிழித்து முதுகில் பிஎஃப்ஐ (PFI) என்று எழுதிவிட்டு சென்றதாக அந்தப் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். பிஎஃப்ஐ என்பது மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். HC On Working Wife and Low Maintenance: மனைவி வேலைக்கு சென்றாலும் ஜீவனாம்ச தொகை குறைக்கப்படாது - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.! காரணம் இதோ.!
இந்தப் புகாரை விசாரித்த போலீசார் இது ஷைன் குமார் உருவாக்கிய கட்டுக் கதை என்பதை கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நாடகத்தில் ஷைன் குமாருக்கு உதவி செய்த அவரது நண்பர் ஜோஷி பிரபலமாவதற்காக இது ஷைன் குமார் அளித்த பொய் புகார் என்பதை ஒப்புக்கொண்டார்.
Army personnel beaten up by PFI members in Kerala was a false story created by the Army man himself- listen to this !
— Vijay Thottathil (@vijaythottathil) September 26, 2023
அதைத் தொடர்ந்து ஷைன் குமார் மற்றும் ஜோஷி இருவரையும் கடக்கால் போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தை ஜோடிக்க அவர்கள் இருவரும் பயன்படுத்திய பச்சை பெயிண்ட், பிரஷ் போன்றவற்றை போலீசார் ஜோஷியின் வீட்டிலிருந்து கைப்பற்றியிருக்கின்றனர்.