Sexual Abuse | Rape File Pic (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 05, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் அருகே மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனீஷ் (வயது 40). இவர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இளம்பெண் ஒருவருடன் இவருக்கு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இப்பெண்ணுக்கு 11 மற்றும் 9ஆம் வகுப்பில் படிக்கும் 2 மகள்கள் உள்ளனர். இது நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஹோட்டல் அறையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

சிறுமி பலாத்காரம் (Minor Girl Rape):

இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, இவர்கள் கண்ணூர் தளிப்பறம்பு அருகேயுள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இளம்பெண் தன்னுடைய 2 மகள்களையும் அங்கு அழைத்து சென்றிருந்தார். அதன்படி சம்பவ நாளன்று, நள்ளிரவில் அனீஷ், இளம்பெண்ணின் 2வது மகளை பாலியல் பலாத்காரம் (Sexual Assault) செய்தார். இதனை சிறுமியின் அக்கா பார்த்துள்ளார். உடனே சிறுமி தன்னுடைய தாயிடம் கூறினார். ஆனால், வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று இளம்பெண் தன் மகளிடம் கூறியுள்ளார்.

வாலிபர் கைது:

இதனையடுத்து, சிறுமியின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பள்ளி ஆசிரியை,  சிறுமியிடம் நடத்திய விசாரணையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. உடனே, இதுகுறித்து மாதமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அனீஷை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3