Died Man Lokesh | Rain Water Drain Line (Photo Credit: News 9 LIve / Twitter)

மே 23, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. அம்மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் (Bangalore Rains) புரட்டியெடுத்த மழையால் பல தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இந்த நிலையில், பெங்களூர் அக்ராஹார பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (Lokesh, Bangalore Agrahara) (வயது 32). இவர் சம்பவத்தன்று தனது வீட்டருகே உள்ள கால்வாயில் எவ்வுளவு வேகமாக தண்ணீர் செல்கிறது? எவ்வுளவு நீரோட்டம் உயர்ந்துள்ளது என்பதை சோதனை செய்ய விரும்பியுள்ளார்.

தண்ணீரின் வேகம் பார்வைக்கு தெரிந்ததால், அவருடன் இருந்தவர்கள் ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர். அதனை கண்டுகொள்ளாத லோகேஷ் தண்ணீரை சோதனை செய்ய இறங்கியவர், நொடிப்பொழுதில் உயர்ந்த நீரின் வேகத்தால் அடித்து செல்லப்பட்டார். Ray Stevenson: தோர், ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் காலமானார்; ஆர்.ஆர்.ஆர் படக்குழு பகிர்ந்த முக்கிய தகவல்; சோகத்தில் ரசிகர்கள்..! 

Bangalore Rain Lokesh Died (Photo Credit: ANI)

இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் லோகேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், அவரின் சடலம் 5 கி.மீ தொலைவில் உள்ள கால்வாயில் மீட்கப்பட்டுள்ளது.

அக்ராஹார பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாயில் விழுந்த லோகேஷ், பிரதராயணபுரா (Byatarayanapura) பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் வெட்டி வீராப்பு அவரது உயிருக்கே எமனாக அமைந்த சோகம் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக கேம்பபுரா அஹ்ரகார காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.