Fire Accident (Photo Credit: Pixabay)

ஜனவரி 27, பாலக்காடு (Kerala News): கேரள மாநிலம், கோட்டயம் (Kottayam) மாவட்டத்தில் உள்ள மாரமங்கலத்தில் கூட்டுறவு வங்கி மேலாளராக பணியாற்றி வந்தவர் சிபி (வயது 60). இவர், நேற்று முன்தினம் (ஜனவரி 25) எழலூர்-தொடுப்புழா சாலையில் தனது காரில் சென்றுக் கொண்டிருந்தார். நரிக்குழி சந்திப்பில் சென்றுக் கொண்டிருந்த போது திடீரென காரின் முன்பகுதியில் லேசான புகை வந்தது. சற்று நேரத்தில் கார் தீப்பற்றி (Car Fire Accident) எரிந்தது. உடனே, காரை விட்டு இறங்கமுடியாமல் தவித்த அவர், தீயில் சிக்கி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். Husband Bites Wife's Lip: மனைவியின் உதட்டை கடித்து குதறிய கணவர்; 16 தையல்கள்.. அரங்கேறிய வினோத சம்பவம்..!

உடல் கருகி பலி:

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தொடுப்புழா தீயணைப்பு வீரர்கள், பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். பின்னர், அவரது உடலை மீட்டு களமச்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து, தொடுப்புழா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.