Investigation File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 27, மதுரா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மதுரா (Mathura) மாவட்டத்தில் உள்ள நாக்லா பூசான் கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவர், தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். தம்பதி இருவருக்கும் அடிக்கடி தகராறு (Family Dispute) ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 24ஆம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்பிய அவர், மீண்டும் தன் மனைவியிடம் சண்டை போட்டார். மேலும், தனது மனைவியை சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க வந்த தன் சகோதரியையும் விஷ்ணு தாக்கியதாக கூறப்படுகிறது. Four People Drown In Sea: சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. கடலில் மூழ்கி 4 பேர் பலி..!

உதட்டை கடித்து குதறிய கணவர்:

இவ்வாறு மனைவியை தொடர்ந்து அடித்து துன்புறுத்திய அவர், மனைவியின் உதட்டை கடித்து குதறினார். இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உதட்டில் 16 தையல்கள் போடப்பட்டன. இதுகுறித்து பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து கணவன் விஷ்ணு, அவரின் சகோதரர் மற்றும் தாயாரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.