File Image: Bitcoin

டிசம்பர், 10: இன்றளவில் நாம் நமது போன் நம்பர் முதல், வங்கிக்கணக்கு எண், பிற அடையாள அட்டை எண், நமது சமூக வலைதள கணக்குகளின் ரகசிய தகவல்கள் (Private Information) போன்றவற்றை நினைவில் வைக்கிறோம். சிலர் கணினியிலேயே சேமித்து வைக்கிறார்கள். ஆனால், அது செயல்படாமல் சென்றால் என்ன செய்வது?.. காகிதத்தில் அதனை குறித்துகொண்டோரின் நிலைமை தப்பிக்கும். இவ்வாறாக அனைத்தையும் சிந்தித்து விபரங்களை தனித்தனியே சேமித்து வைத்தால் கிடைக்கும் நன்மையை பிட்காயின் (Crypto Bitcoin) செய்கிறது.

நமது குழுவில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால், நமது பணப்பரிமாற்றம் தொடர்பான செய்திகள், வரவு - செலவு கணக்குகள் மாற்றம் அல்லது புதுப்பிப்பு என ஒருவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ஐவருக்கும் உடனடியாக தகவலாக அனுப்பி வைக்கப்படும். இது வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதால் பிட்காயினில் பிளாக் செயின் சிறப்பம்சம் நம்பகத்தன்மையை பெறுகிறது.

2 ஆயிரம் பேர் கொண்ட பிளாக்செயின் குழுவில் ஒவ்வொரு பரிமாற்றம் தொடர்பான தகவலும் ஒவ்வொருவருக்கும் பகிரப்படுவதால் பொய்கணக்கு என்பதற்கு வாய்ப்பே இல்லை. ஒருவர் அக்கணக்கை ஹேக்கிங் செய்தால் மட்டுமே அவற்றை மாற்ற இயலும். ஆனால், அதுவும் எளிதான விஷயமல்ல. அரசின் வரிப்பணம் பிளாக் செயின் சிஸ்டம் மூலமாக செலவு செய்யப்படும் பட்சத்தில், அரசு தனது பணம் எவ்வாறு? எதற்காக? செலவு செய்யப்படும் என வெளிப்படையாக ஒவ்வொருவருக்கும் தெரியும். இதனால் ரூ.1 க்கு கூட கணக்கு இருக்கும் என்பதால் ஊழல் வாய்ப்பில்லை. Watermelon Seed Benefits: அடேங்கப்பா.. தர்பூசணி விதையில் இருக்கும் நன்மைகள் இவ்வுளவா?.. இந்த கோடையில் தவறவிடாதீர்கள்..! 

பிட்காயின் சாதகங்கள் (Bitcoin of Benefits): பிட்காயின் தொழில்நுட்பம் வங்கி போன்று மூன்றாவது நபரின் தலையீடு இல்லாமல் பரிவர்த்தனை செய்துகொள்ளும் வாய்ப்பினை தருகிறது. அதன் வெளிப்படைத்தன்மையால் கணக்கு வழக்குகளை மாற்றம் செய்ய இயலாது.

பிட்காயின் ஒவ்வொரு பெட்டகமும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டு இருப்பதால், ஹேக்கர்கள் அதனை திருடுவது மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்றாகும். ஒரு தகவல் பிளாக் செயினிற்குள் வந்துவிடும் பட்சத்தில், அது காலம் இருக்கும் வரை நிலைத்து இருக்கும்.

பாதகங்கள்: பிட்காயின் தொடர்பான விஷயங்களில் வெளிப்படைத்தன்மை இருக்கும் பட்சத்திலும், பணப்பரிவர்த்தனை செய்யும் தனிநபருடைய அடையாளம் தெரிவது இல்லை. இது டார்க்வெப் & பயங்கரவாத, போதைப்பொருள் பணப்பரிவர்த்தனைக்கு உபயோகம் செய்யப்படுகிறது. இது தீங்கான விஷயங்களில் முக்கியமான ஒன்றாகும்.

கடுமையான சட்டம், சட்டத்திற்கு புறம்பான பரிவர்த்தனைகள், தவறான செயல்களில் ஈடுபடுவோரின் வாலட் முடக்கம் போன்ற நடவடிக்கைகள் விரைவில் அறிமுகம் ஆகும் பட்சத்தில் பிட்காயின் பின்னடைவை சந்திக்கலாம். ஏனெனில் இன்று பண முதலைகள் சட்டவிரோதமாக அதனை உபயோகம் செய்து தங்களின் வளத்தை பெருகினாலும், அதனை அரசு கையில் எடுக்கும்போது கட்டுப்பாடுகள் அதிகரிக்கும். இது சட்டவிரோத கும்பலுக்கு அடியாக இருக்கும்.

பிட்காயினின் வரவு வங்கிகளுக்கு மாற்றாக அமையுமா? என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை என்பதே நிதர்சனம். ஆனால், எதிர்காலத்தில் பிளாக் செயின் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும் பட்சத்தில், வங்கிகளின் பயன்பாடுகள் குறையும் சூழலும் ஏற்படலாம்.

Note: பிட்காயின் வாங்குவது/விற்பது உங்களின் தனிப்பட்ட விருப்பம். முதலீடுகளில் முறைகேடுகளும் இருக்கலாம். முதல் உங்கள் பணம் என்பதால் முழு ரிஸ்கும் உங்கள் பொறுப்பே. கவனத்துடன் இருப்பது எப்போது சாலச்சிறந்தது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 08:52 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).